பூச்சி, நோய் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகள் மேலாண்மை 

பூச்சி மேலாண்மை
நோய்  மேலாண்மை

1. காண்டாமிருக வண்டு - ஒரிக்டஸ் ரினோசரஸ்
2. எரியோபையிட் சிலந்தி - அசிரியா கெர்ரோனிஸ்
3. சிவப்புக்கூண்வண்டு - ரின்கோபோரஸ் ஃபெர்ரோஜினஸ்
4. கருந்தலைப் புழு - ஓப்பிசினா அரினோசெல்லா
5. நத்தைப்புழு - பாரஸா லெப்பிடா மற்றும கான்த்தில்லா  ரொட்டுன்டா
6. தென்னை ஸ்கிப்பர் பட்டாம்பூச்சி - கங்காரா தைர்ஸி, சூஸ்டஸ் கிரிமிஸ்
7. நாவாய் பூச்சி - பாராடாஸினஸ் ரோஸ்டிரேடஸ்
8. பை புழு - மானதா அல்பிபெஸ்
9. சாம்பல்நிற வண்டு - லூக்கோஃபோலிஸ் கோனியோஸ்போரா 
10. கரையான் - ஓடன்டோடெர்மஸ் ஒபேஸஸ்
11. கண்ணாடி இறக்கை நாவாய் பூச்சி - ஸ்டெப்பானிடிஸ் டிபிகஸ்
12. செதில் பூச்சிகள் -  ஆஸ்பிடியோட்டஸ் டெஸ்டிரக்டர்
13. மாவுப் பூச்சி - சூடோகாக்ஸ் லாங்கிஸ்பைனஸ்
14. மரநாய் - விவேரியா ஸீபாத்தா
15. எலி - ராட்டஸ் ராட்டஸ்
16. தேங்காய்/ குரும்பைத் துளைப்பான்: சைக்ளோடஸ் ஒம்மா
17. நூற்புழுக்கள் - பைலம் நெமட்டோடா

 

1. காண்டாமிருக வண்டு: ஒரிக்டஸ் ரினோசரஸ்
இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.

காண்டாமிருக வண்டு
காண்டாமிருக வண்டு புழு


தாக்குதலின் அறிகுறிகள் :

  • இவ்வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தில்  துளையிட்டு, மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டுப்பகுதியை மென்று விடுகிறது.
  • தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது,  தென்னை மட்டை முக்கோண வடிவில்,  சீராக கத்தரியால் வெட்டியதுபோல் தோற்றமளிக்கும்.
  • இவ்வண்டு தாக்குவதால் 10-15% மகசூல் குறையும்.
  • மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது.

 

நடுக்குருத்தில் துளைகளுடன் மென்றுதின்ன மரச்சக்கைகள் ஒட்டியிருத்தல்
இலைகள் முக்கோண வடிவ வெட்ப்பகுதிகள்


பூச்சியை அடையாளம் காணுதல்:

முட்டை: வெள்ளை நீள்வட்ட வடிவமுடைய முட்டைகள் எருக்குழி, மக்கிய உரத்தின் அடிப்பகுதி போன்ற பகுதிகளில் 5-15 செ.மீ ஆழம் வரை காணப்படும்.  முட்டைப்பருவம் 8-18 நாட்கள்.  ஒரு பெண் வண்டானது 140 லிருந்து 150 முட்டைகள் வரை இடும்.

புழு: 
தடித்து , மந்தமான,  வெள்ளை நிறத்தில் சி (“C”) போன்று வளைவுடன் இலேசான பழுப்பு நிற தலையுடன் 5-30 செ,மீ ஆழத்தில் எருக்குழியினுள் காணப்படும்,

கூட்டுப் புழு: 
இவை மண்ணினுள் 0.3-1 மீ ஆழத்தில் காணப்படும்,
வளர்ச்சியடைந்த வண்டுகள்: இது நன்கு தடித்து பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில், தலையில் நீண்ட கொம்புகள் நீட்டிக் கொண்டிருக்குமாறு அமைந்திருக்கும்.    பெண் வண்டுகளில் கொம்புகள் குட்டையாகவே இருக்கும்.

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை தோப்பிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும்
  • தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும்.
  • கம்போஸ்ட் மற்றும் உரக்குழிகளில் இருந்து காண்டாமிருக வண்டின் முட்டைகள்,  புழுக்கள்,  கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழிக்கவும்.

இராசயன முறை:

காண்டாமிருக வண்டு மேலாண்மை - இரசாயன முறை - வீடியோ

  • சுளுக்கி கொண்டு மரங்களிலிருந்து வண்டை வெளியே எடுத்தப் பின், அதன் ஓட்டைகளை 1 கி.கி மணல் கலந்த கலவையைக் கொண்டு அடைத்து விட வேண்டும்,.

 

இயந்திர முறை:

காண்டாமிருக வண்டு
பிடிபட்ட காண்டாமிருக வண்டு
  • வண்டின் தாக்குதல் அதிகரிக்கும் போது, மரத்தின் குறுத்துப் பாகத்தில் வளர்ந்த வண்டு உள்ளதா என்று பார்த்து,  இருந்தால் கம்பி அல்லது  சுளுக்கியால் அதைக் குத்தி வெளியில் எடுத்துக் கொன்று விட வேண்டும்.
  • கோடை மற்றும் மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

உயிரியல் முறை: காண்டாமிருக வண்டின் வாயில் பேக்குலோ வைரஸ் ஒரைகடஸ் என்ற வைரஸை ஊசிமூலம் செலுத்தி 15 வண்டுகள் / 1 ஹெ  என்ற அளவில் தென்னந்தோப்பில் விட்டால் அது மற்ற வண்டுகளுடன் கலந்து நோயினைப் பரப்பி அவற்றை அழிக்கின்றது.

மேலே செல்கமேலே செல்க

 

2. ஈரீயோஃபைட் சிலந்தி:

தென்னந் கரையானின் கூட்டம்
நுண்ணோக்கியின் பார்வையில் எரியோபிட் கரையான்


தாக்குதலின் அறிகுறிகள்:

  • 2-3 மாதங்களான குரும்பைகளில் வெளிர் மஞ்சள் நிற முக்கோண வடிவ நிறமாற்றங்கள் பிரியாந்த் எனும் இளந்திசு வளையத்திற்குக் கீழ் தோன்றும்.  இது ஆரம்ப அறிகுறியாகும்.
  • பின்பு இப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாற்றம் அடைகிறது.  இச் சிலந்தியினால் அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் கீழே விழுந்து விடுகின்றன.  தாக்கப்பட்ட குரும்பைகள் வளர்ச்சி அடைந்து இளங்காயாக மாறும்போது, பழுப்பு நிறப்பகுதியின் அளவு அதிகமாவதுடன்,  நீளவாக்கில் பல சிறிய வெடிப்புகளும் தோன்றுகின்றன.
  • வெடிப்புகளின் வழியே பிசின் போன்ற திரவம் வெளிப்படும்.
  • இதனால் காய்கள் சிறுத்துவிடுவதுடன், அதன் உள்ளே இருக்கும் பருப்பின் கன அளவும் குறைந்து விடுகின்றது.  தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் உரிமட்டையில் ஏற்படும் வெடிப்பினால் பருப்புகள் கெட்டுப்போய்விடுகின்றன.
இலைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள்
காய்களின் மிது பழுப்பு நிறத்திட்டுகள்


பூச்சியை இனம் காணுதல்:
அறிவியல் பெயர்:  அசேரியா கெர்ரிரோனிஸ்.
இச்சிலந்திகள் பருவமடைந்த பெண் பூக்களின் புல்லிவட்டத்தின் இடைவெளியில் காணப்படுகின்றன.  இவை கருவுறாத பூக்களைத் தாக்குவதில்லை.  இச்சிலந்திகள் மிகச்சிறிய அதாவது  200-250 மைக்ரான் நீளமும், 36-52 மைக்ரான் அகலமும் கொண்ட அளவில் மட்டுமே இருப்பதால் கண்ணிற்குத் தெரிவதில்லை.  இரு ஜோடி கால்கள் கொண்டவை.  இளம் மற்றும் பெரிய சிலந்தி வெளிர் நிறத்தில் நீளமான உடலமைப்பையும், புழு போன்ற வடிவமும் கொண்டவை.  இதன் வாழ் நாட்கள் 7-10 நாட்களே என்றாலும் முட்டை,  இரு புழுப்பருவங்கள் மற்றும் முதிர்ந்த சிலந்தி எனப் பல்வேறு படிகளைக் கொண்டது.

மேலாண்மை:
அ) உழவியல் முறைகள்:

  • தாக்கப்பட்ட மரங்களிலிருந்து விழும் குரும்பைகளைச் சேகரித்து, அழித்துவிட வேண்டும்.  தேவையான அளவு நீர் பாய்ச்சுதல் அவசியம்.
  • ஊடுபயிர் (சணப்பை - ஆண்டிற்கு  4 பயிர்கள்) மற்றும் தடுப்பு வரப்புப் பயிராக சவுக்கு   மரங்களை வளர்ப்பதன் மூலம் இச்சிலந்தி மேலும் பல மரங்களை தாக்காமல் தடுக்கலாம்.  
  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட யூரியா 1.3 கி.கி,  சூப்பர் பாஸ்பேட் 2.0 கி.கி மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் 3.5 கி.கி / மரமொன்றிற்கு /  ஆண்டிற்கு அதிகமாக உரமிடுவதன் மூலம் சிலந்தித் தாக்குதலின் எதிர்ப்பு சக்தியை தென்னையில் அதிகரிக்கலாம்.
  • மேலும் போராக்ஸ் 50 கி + ஜிப்சம் 1.0 கி.கி  + மேங்கனீசு சல்ஃபேட் 0.5 கி.கி / மரம் ஒன்றிற்கு / ஆண்டிற்கு என்ற அளவிலும்,  தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுட்டச் சத்துக் கரைசல் 200 மி.லி /  மரம் போன்ற நுண்ணுட்டச் சத்துக்களை மண் வழியே கொடுத்தல் நல்ல பலன் தரும்.
எரியோபிட் கரையான் கட்டுப்பாடு - இரசாயன முறை- வீடியோ


ஆ) இரசாயன முறை:
1) வேர் மூலம் செலுத்துதல்:

  • மோனோகுரோட்டோபாஸ்-36 WSC, 15 மி.லி அல்லது  டிரையஸோஃபாஸ் 40 EC (குழம்புத்திரட்டு) 15 மி.லி அல்லது கார்போசல்ஃபான் 25  EC 15 மி.லி / 15 மி.லி நீரில் கலந்தது, இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தென்னைக்கு வேர்மூலம் செலுத்தலாம்.
  • வேர் மூலம் இம்மருந்தை செலுத்துமுன் முற்றிய காய்களைப் பறித்துவிட வேண்டும்.  அதோடு மருந்து செலுத்தியபின் குறைந்தது 45 நாட்களுக்குப் பிறகே அடுத்த காய்பறிப்பு செய்ய வேண்டும்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் அக்ரோ-பயோஸைடு மருந்து 30 மி.லி / மரம் ஒன்றுக்கு (கார்போசல்ஃபான் மருந்தை வேர் மூலம் செலுத்திய பின் 60 நாட்கள் கழித்து) செலுத்தலாம். 
    குறிப்பு:  வேர்மூலம் மருந்தினை செலுத்தும் முன்,  முதிர்ந்த காய்களைப் பறித்து விடவும்.

2) சுற்றுச்சூழலுக்கு உகந்த மருந்தை வேருக்கு (மரத்திற்கு) அருகில் அளித்தல்:
சுற்று 1:  அஸாடிராக்டின் 1%  (5 மி.லி / 1லி நீரில் கலந்தது)
சுற்று 2:  வேப்பஎண்ணெய் + டீப்பால் (30 மி.லி/1 லி நீரில் கலந்தது)

  • ேலும் டிரையஸோஃபாஸ் 40 EC 5 மி.லி/லி (அ)  மோனோகுரோட்டோஃபாஸ் 36 WSC 2 மி.லி/லி (அ) கார்போசல்ஃபான் 25 EC. 2 மி.லி/லி ஏதேனும் ஒரு மருந்தை வேம்பு அஸல் 1%   அதாவது 5 மி.லி/லி உடன் கலந்து வேருக்கு அருகே மண்ணில் இடவும்.
  • வேப்பம் புண்ணாக்கு 5 கி.கி / மரம் ஒன்றிற்கு / ஓராண்டிற்கு.

வேப்ப எண்ணெய்+ பூண்டுக் கரைசல் தயாரித்தல்: 2% வேப்ப எண்ணெய் + பூண்டு கரைசல் 10 லி தயார் செய்ய,  200 மி.லி வேப்ப எண்ணெய்  மற்றும் 200 கி பூண்டு,   50 கி சாதாரண சோப்பு போன்றவை தேவைப்படும்.  சோப்புக் கட்டியினை துண்டுகளாக்கி 50 மி.லி சற்று மிதமான சுடு நீரில் கரைக்க வேண்டும்.  200 கி பூண்டினை அரைத்து, அச்சாற்றினை 300 மி.லி தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.  500 மி.லி சோப்புக் கரைசலை 200 மிலி வேப்ப எண்ணெய்யுடன் மெதுவாக சேர்த்துக் (ஊற்றிக்) கொண்டே வேகமாகக் கலக்க வேண்டும்.  இவ்வாறு தயாரித்த வேப்ப எண்ணெய் + சோப்புக் கரைசலுடன் பூண்டுச் சாற்றினைக் கலக்கவும்.  இந்த 1 லி கரைசலுடன் 9 லி நீர் சேர்த்து 10 லி 2% வேப்ப எண்ணெய் + பூண்டு கரைசலைத் தயாரிக்கவும்.

தென்னைக்கு இக்கரைசலை இடும் முறை:

  • 45 நாட்களுக்கு ஒரு முறை இக்கரைசலை (1 லி) தென்னம்பாளைகள், குரும்பை - இளங்காய்களின் மீது கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.  குறைந்த உயரமுடைய சிறிய மரங்களுக்கு ராக்கர் தெளிப்பான மூலம் தெளிக்கலாம்.
  • மழை இல்லாத காலங்கள் கொண்டைப்பகுதியில் நன்கு படுமாறு தெளிப்பது சிறந்தது.
    முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நவடிக்கைகள்:
  • தொற்றுதலைத் தடுக்க காற்றுக் காலங்களில் மருந்து தெளிப்பதைத் தவிர்க்கவும்.
  • தெளிக்கும் போது கை மற்றும் மூக்கு, வாய் போன்றவற்றிற்கு முறையான உறை அணிவது அவசியம்.
  • தெளித்து முடித்த உடன் சோப்பு கொண்டு முகம், கை, கால் ஆகியவற்றை அலம்புவது  மிக மிக அவசியம் ஆகும்.

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நவடிக்கைகள்:
·        தொற்றுதலைத் தடுக்க காற்றுக் காலங்களில் மருந்து தெளிப்பதைத் தவிர்க்கவும்.
·         தெளிக்கும் போது கை மற்றும் மூக்கு,  வாய் போன்றவற்றிற்கு முறையான பாதுகாப்பு உறை அணிவது அவசியம்.
·         தெளித்து முடித்த உடன் சோப்பு கொண்டு முகம், கை, கால் ஆகியவற்றை அலம்புவது  மிக மிக அவசியம் ஆகும்.

இ) உயிரியல் முறை:
சிலந்திப் பூச்சிகளைக் கொன்று அழிக்கும் எதிரிப் பூச்சிகளும்  பூஞ்சாணங்களும் உள்ளன. ஹெர்சுட்டெல்லா தாம்சோனி மற்றும் வெர்டிசிலியம் லெகானி போன்ற பூஞ்சாணங்கள் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை.  இவை தனியார் மூலம் வணிக ரீதியாக வளர்க்கப்பட்டு, சந்தைகளில் விற்கப்படுகின்றன.

மேலே செல்கமேலே செல்க

 

3. சிவப்புக் கூண் வண்டு: ரின்கோபோரஸ் ஃபெர்ரோஜினஸ்

சிவப்பு கூண் வண்டின் கூட்டுப்புழு
சிவப்பு கூண் வண்டு


தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரத்தில் ஓட்டைகளும், ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகளும் காணப்படும். 
  •  புழுக்கள் உட்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும்,
  • வெள்ளைப் புழுவானது இளந்தண்டு பகுதியைத் துளைத்து உள்ளே சென்று, இளந்தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று வேகமாக வளர்கின்றது.  ஆகவே தண்டின் சோற்றுப்பகுதி எங்கும் துவாரங்களாக காணப்படுகின்றன.
  • பலமற்ற இந்த நிலையில் மரத்தின் கொண்டைப் பகுதி எளிதாக முறிந்து விழுவது இயல்பு.
  • மரத்தின் தண்டுப்பகுதியில்  கூர்ந்து கவனித்தால், புழுக்களின் இரையும் சப்தம் கேட்கும்.
  • தாக்குதல் அதிகரிக்கும் நிலையில் மரத்தின் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. அத்துடன் கொண்டைப்பகுதி முறிந்து விடுவதால் மரமானது பட்டுவிடும்.
தண்டுப் பகுதியில் துளைகள்
துளைகளிலிருந்து மென்று தின்ற மரச் சக்கைகள்

பூச்சியை அடையாளம் காணதல்:

அறிவியல் பெயர்:  ரின்கோபோரஸ்   ஃபெர்ரூஜீனஸ்
முட்டை: நீள்வட்ட வடிவத்தில் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  துளைக்கப்பட்ட துவாரங்கள், காயம்பட்ட மற்றும் தண்டின் தாக்கப்பட்ட இடுக்குகளில் முட்டைகள் இடப்படுகின்றன.

புழு:
இலேசான மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.  இப்புழுக்களுக்குக் கால்கள் கிடையாது.  குட்டையான, சதைப்பற்றுடன், நடுவில் தடித்தும் ஓரங்களில் சற்று குறைந்ததாகவும் புழுக்கள் காணப்படும்.

கூட்டுப்புழு: புழுக்கள் தண்டின் உடல் பகுதியில் கூட்டை அமைக்கின்றன.  தின்று கழித்த நார் மற்றும் சக்கைப்பகுதியை இணைத்து நீண்டு உருண்ட கூட்டை இப்புழுக்கள் அமைக்கின்றன.
வளர்ச்சியடைந்த வண்டு: சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில், முதுகுப் பகுதியில் 6 புள்ளிகளுடன் காணப்படும்.  ஆண் வண்டுகள் நீண்ட துதிக்கை போன்ற மூக்குடன்,  வாய்ப்பாகத்தில் அடர்ந்த உரோமங்களுடன் காணப்படும்.

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • அருகில் இருக்கும் மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வண்டு  தாக்கிய மரங்களை வெட்டி அழிக்கவும்.
  • தண்டுப்பாகத்தில் உள்ள ஓலைகளை முழுவதும் வெட்டுவதால் வண்டுகள் முட்டையிட எளிதாகிறது.   இதைத் தடுக்க பச்சை ஓலைகளை வெட்டுவதைத் தவிர்க்கவும்.  தேவை ஏற்படின் தண்டிலிருந்து 120 செ.மீ விட்டுப் பின் ஓலைகளை நறுக்குவதால் புழுக்கள் எளிதில் துளைவிட்டு உட்செல்வதை தடுக்கலாம்.

பொறி அமைத்தல்:

சிவப்பு கூண் வண்டு - பொறி முறை - வீடியோ


பிரமோன் பொறி:

படி 1 : குறிப்பிட்ட சில வாலிகளில் 3-4 துளைகள் இட்டு அதனை தென்னை நார், சணல் நார்கள் கொண்டு இலேசாக அடைக்கவும்.  இதனால் வண்டுகள் வாலியுனுள் வர ஏதுவாகும்.
படி 2 :  வாலியினுள் ஃபெர்ரோலியூர், 1 லி நீர், 100 கி அன்னாசி (அ) கரும்புச் சாறு, 2 கி ஈஸ்ட் மற்றும் 2 கி கார்போரைல் போன்றவற்றை வைக்கவும்.
படி 3 : இந்த வாலியினை வண்டின் தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் வைக்கவும்.
படி 4:  வாரத்திற்கொருமுறை இந்த வாலிநீரை மாற்ற வேண்டும்.  இது கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும்.

தென்னை ஓலைப்பொறி: கரும்புச்சாறு 2.5 கி.கி + ஈஸ்ட் மாத்திரை 5 கி + 5 மி.லி அசிடிக் அமிலம் (அல்லது அன்னாசி/கரும்புச்சாறுடன் ஊறவைத்தது) + நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகள் ஏக்கருக்கு 30 வீதம் தென்னந் தோப்பில் வைத்து,  கூண் வண்டுகளைக் கவரச் செய்து அழிக்கலாம்.

இரசாயனமுறைகள்:

சிவப்பு கூண் வண்டு - இரசாயன முறை - வீடியோ

 

  • கொண்டைப் பகுதியில் தாக்குதல் இருப்பின் ஓலைகளைச் சுத்தம் செய்து பூச்சிக்கொல்லிக் கரைசலை ஊற்றவும்.   தண்டில் துளைகள் இருப்பின் அவற்றை தார் அல்லது சிமெண்ட் பூச்சு மூலம் அடைத்து விட வேண்டும்.  ஆக்கர் கருவி மூலம் துளையிட்டு அத்துளையில் புனல் வைத்து மருந்தை ஊற்றலாம்.
  •  பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துளைகளை கவனித்து மேலே இருக்கும் துளையைத் தவிர பிறவற்றை அடைத்துவிட வேண்டும்.  பின்பு இத்துளை வழியே புனல் மூலம் 1% கார்போரைல் (20கி/லி) (அ) 0.2% டிரைகுளோர்பான் கரைசலை மரம் ஒன்றுக்கு 1 லி வீதம் ஊற்றிவிட்டுத் துளையை அடைத்து விட வேண்டும்.  தேவைப்படின் 1 வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்யவும்.
  • மணலுடன் வேப்பங்கொட்டைப்பொடி 2:1 என்ற வீதத்தில் கலந்த கலவை அல்லது லின்டேன் 1.3 கிராம் மற்றும் மணல் கலந்து விரவி மட்டை இடுக்குகளில் 3 மாதத்திற்கு ஒருமுறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூண் வண்டு முட்டை இடுவதைத் தவிர்க்கலாம்.

வேர்வழி மருந்திடுதல்:        

  •  நன்கு வளர்ந்து கொண்டிருக்கும் புதிய வேரைத் தேர்வு செய்யவும்.
  • அதில் சிறிய அளவில் கோணலாக வெட்டி, அதை மோனோ குரோட்டோஃபாஸ் 36 WSC 10 மி.லி + நீர் 10 மி.லி கலந்த கரைசலினுள் இருக்குமாறு அமைக்கவும்.  இக்கரைசலானது 7 - 10 செ.மீ அளவுள்ள பாலிதீன் பையினில் வைக்கப்பட்டிருக்கும்.
  • பாலிதீன் பையினை சரியாக வைத்து வேருடன் சேர்த்துச் சிறு நுால் கொண்டு கட்டி விடவும்.
  • 24 மணி நேரம் கழித்து கரைசல் உறிஞ்சப்பட்டுள்ளதா  என கவனிக்கவும்.
  •  கரைசல் உறிஞ்சப்படவில்லை எனில் வேறொரு வேரினைத் தேர்வு செய்து மீண்டும் மருந்தை செலுத்தவும்.
  •  தீவிரமான வண்டுத் தாக்குதல் இருக்கும்போது மட்டுமே இம்முறையினைக் கையாள வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

 

4. கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு:

இப்புழுவானது கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் விளைவிக்கின்றது.  வருடம் முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைக்கலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

கருந்தலைப் புழு - பூச்சி முதிர்
கருந்தலைப் புழு


தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகளின் அடிப்புறத்தில் நுலாம்படை காணப்படுதல்

  • இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது.

  • மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியல் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள்  அனைத்தும் காய்ந்து போய்விடும்.

  •  ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும்.

  • அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.

கருந்தலைப்புழு - அறிகுறிகள் - வீடியோ

 

பூச்சியை இனம் காணுதல்:

அறிவியல் பெயர்:   ஒபிசீனியா அரினோசெல்லா
இளம் புழு: புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்பழுப்பு நிற தலையையும் உடையது.  இதன் முன் மார்பு பழுப்பு நிறத்திலும், பின்புறம் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.  உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும்.
கூட்டுப்புழு:  கழிவு மற்றும் பச்சைய இலைகளைச்  சுரண்டி செய்யப்பட்ட மெல்லிய நுாலாம் பட்டையினுள் கூட்டுப்புழுக்கள் காணப்படும்.
முதிர்ந்த பட்டாம்பூச்சி:  சாம்பல் நிற வெள்ளைப் பட்டாம் பூச்சியாகும்.
பெண்: பெண் பூச்சியானது நீண்ட உணர்கொம்பும், முன் இறக்கையில் 3 மங்கலான புள்ளிகளைக் கொண்டிருக்கும்.
ஆண்: பின் இறக்கை தோலுடன் இணையும் இடத்தில் சற்று முடியுடன் காணப்படும்.

மேலாண்மை:
சாதாரண முறைகள்/உழவியல் முறைகள்:
தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து அழித்து விட வேண்டும்.  குறிப்பாக கோடை காலம் துவங்கும் முன் செய்து விடுவது நன்று.

கருந்தலைப்புழு - கட்டுப்பாடு (இயந்திர / உழவியல் முறை) - வீடியோ

 

உயிரியல் முறை:

கருந்தலைப்புழு - கட்டுப்பாடு (உயிரியல் முறை) - வீடியோ

 

  • மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.  (அ)  3000 / ஹெ என்ற அளவில் விட வேண்டும்.
  • யூலோபிட், பிராக்கிமெரியா, சாந்தோபிம்பிளா ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.
  • இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற  பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும்.   எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.

இரசாயனத் தெளிப்பு: தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 EC) 0.02%, (அ) மாலத்தியான் 50 EC 0.05% (1 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.05% (அ) பாஸலோன் 0.05% இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.

வேர் மூலம் செலுத்துதல்:

  • நன்கு வளர்ந்து கொண்டிருக்கும் புதிய வேரைத் தேர்வு செய்யவும்.
  • அதில் சிறிய அளவில் கோணலாக வெட்டி, அதை மோனோ குரோட்டோஃபாஸ் 36 WSC 10 மி.லி + நீர் 10 மி.லி கலந்த கரைசலினுள் இருக்குமாறு அமைக்கவும்.  இக்ககரைசலானது 7*10 செ.மீ அளவுள்ள பாலிதீன் பையினில் வைக்கப்பட்டிருக்கும்.
  • பாலிதீன் பையினை சரியாக வைத்து வேருடன் சேர்த்துச் சிறு நுால் கொண்டு கட்டி விடவும்.
  • 24 மணி நேரம் கழித்து கரைசல் உறிஞ்சப்பட்டுள்ளதா  என கவனிக்கவும்.
  • கரைசல் உறிஞ்சப்படவில்லை எனில் வேறொரு வேரினைத் தேர்வு செய்து மீண்டும் மருந்தை செலுத்தவும்.
  • தீவிரமான வண்டுத் தாக்குதல் இருக்கும்போது மட்டுமே இம்முறையினைக கையாள வேண்டும்.

தண்டு மூலம் செலுத்துதல்:

  • தரையிலிருந்து 1 மீ உயரத்தில் மரத்தின் தண்டுப் பகுதியில் ஒரு துளையிட வேண்டும்.  10 மி.லி மோனோகுரோட்டோஃபாஸ் 36 WSC என்ற மருந்தை ஊசி மூலம் எடுத்து அத்துளையின் வழி செலுத்தவும்.  மருந்து முழுவதும் உறிஞ்சப்பட்ட உடன் அத்துளையினைக் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்த  களிமண் கொண்டு நன்கு அடைத்து விடவும்.
  • ஓட்டுண்ணிகள் ஏதேனும் தென்னையில் கருந்தலைப் புழுவினைக் கட்டுப்படுத்த விடப்பட்டிருந்தால், விடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குப் பிறகே இரசாயன மருந்துகளை இடவேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

 

5. நத்தைப் புழு:  பாரசா லெப்பிடா மற்றும் கான்த்தியெலா ரொட்டன்டா:

தாக்குதலின் அறிகுறிகள்: இப்பூச்சியின் புழுக்களே ஓலையைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றது.   இளம் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சயத்தை சுரண்டி உண்ணும்.  இவை வளரும்போது ஓலையின் நடு நரம்புகள் மட்டுமே இருக்கும்.  இதனால் அதிகளவில் தாக்கப்பட்ட ஓலைகள் காய்ந்து விடும்.

நத்தைப் புழு - அறிகுறிகள்

பூச்சியை இனம் காணுதல்:

முட்டை: இதன் முட்டைகள் ஓலையின் அடிப் பரப்பில் தட்டையாக ஒட்டிக்கொண்டு பளப்பளப்பாகக் காணப்படும்.
இளம்புழு:  இளம்புழுவின் பச்சை நிற உடலில் வெள்ளை நிறக் கோடுகள் காணப்படுவதோடு,  நான்கு வரிசை சிறிய கறுப்பு நிற மயிர்க்கற்றைகள் காணப்படுகின்றன.  இவை தோலில் பட்டால் எரிச்சல் மட்டும் வலி ஏற்டுகிறது.
கூட்டுப்புழு: நெருக்கமாக அமைந்த, அடர் பழுப்பு நிற பட்டுக் கூட்டினுள் காணப்படுகின்றன. (இக் (கக்கூன்கள்) இப்பட்டுப் போன்ற கூடுகள் மேற்பகுதி குவிந்தும் அடிப்பகுதி இலைப்பரப்பில் ஒட்டிக்கொள்ள ஏற்றவாறு தட்டையாகவும் இருக்கும்.  இக்கூடுகளைச் சுற்றிலும் அரிப்பை ஏற்படுத்தக் கூடிய மயிர்கள் அமைந்திருக்கும்.
முதிர்ந்த பூச்சி:  பட்டாம் பூச்சி போன்ற வளர்ந்த பூச்சியின் பச்சை நிற இறக்கைகளின் கீழ்புறம் அடர்ந்த நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன.

மேலாண்மை:
இரசாயன முறை:

  • தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,
  • மோனோகுரோட்டாபாஸ் 36 WSC மருந்தினை 10 மி.லி + 10 மி.லி    நீருடன் சேர்த்து 45 நாட்கள் இடைவெளியில் 3 முறை வேர் மூலம் செலுத்த வேண்டும்.
  • கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

பொறி அமைத்தல்: விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.  ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும்.

மேலே செல்கமேலே செல்க

 

6. தென்னை ஸ்கிப்பர் வண்ணத்துப்பூசசி:

இலை நுனிகள் சுருளுதல்
ஸ்கிப்பர் புழு

தாக்குதலின் அறிகுறிகள்:
கங்காரா திர்ஸிஸ்:  சூஸ்டஸ் கிராமின்ஸ்

  • தென்னை ஓலையின் ஒரு பகுதி மட்டும் கத்தரித்ததுபோல் வளைந்து, நெளிந்து காணப்படும்.
  • இவ்வாறு சுருண்ட இலைகள் வறண்டு காய்ந்திருக்கும்.
காங்கரா தைரஸிஸ் கூட்டுப்புழு
தென்னை ஸ்கிப்பர் புழு


பூச்சியை இனம் காணுதல்:

இளம்புழு:   பச்சை நிற உடலில் சிவப்புக் குறிகள் காணப்படும்.  உடல்  முழுவதும் வெள்ளைநிற மெழுகுப்பொருளால் சூழப்பட்டுள்ளது.
வளர்ந்த பூச்சி:  பட்டாம்பூச்சி பழுப்பு நிறமுடையது.  சாக்லேட் பழுப்பு நிற இறக்கைகளில் மஞ்சள் புள்ளிகள் காணப்படும்.

மேலாண்மை:
இரசாயன முறை

  • தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,
  • மோனோகுரோட்டாபாஸ் 36 WSC மருந்தினை 10 மி.லி + 10    நீருடன் சேர்த்து 45 நாட்கள் இடைவெளியில் 3 முறை வேர் மூலம் செலுத்த வேண்டும்.
  • கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

மேலே செல்கமேலே செல்க

 

7.தட்டைக்கால் நாவாய் பூச்சி: பாரடாசைனஸ் ரோஸ்டிரேட்டஸ்:

முதிராத காய்கள் உதிர்தல்
புல்லிவட்டத்திற்கு கீழே உள்ள நார்களில் துளைகள்

  • இது கடற்கரையோரங்களில் குறிப்பாக கேரளப் பகுதிகளில் (திருவனந்தபுரம்,  வயநாடு,  காஸர்கோடு) அதிகம் காணப்படுகிறது.
  •  பூச்சிகள் மற்றும் “நிம்ப்” எனப்படும் இளம்பூச்சிகள் குரும்பையைத் தாக்கி நீரை உறிஞ்சி விடுவதோடு, புல்லி வட்டத்திற்குக் கீழே சிறு கொட்டை போன்ற தடிப்பை ஏற்படுத்துகின்றன.
  • பாதிக்கப்பட்ட காய்களில் வெடிப்பு பகுதிகள் தோன்றி அதன் உரிமட்டையை வீணாக்கிவிடுவதுடன் பிசின் போன்ற திரவம் வெடிப்பு வழியே கசியச் செய்கிறது.  அதோடு தேங்காய்களில் பருப்பு இன்றி வெற்றுக்காயாகப் போய்விடும்.
  • இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும்போது காய்கள் உதிர்ந்து விடும்.   மேலும் முதிர்ந்த காய்களின் தரம் கெட்டுவிடும்.

பூச்சியை இனம் காணுதல்:
அறிவியல் பெயர்:  பாரடாசைனஸ் ரோஸ்ட்ரேட்டஸ்
வளர்ச்சியடைந்த பூச்சிகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் வாழ்நாள் சுழற்சி ஒரு மாதம் காலம் மட்டுமே.

தட்டைக்கால் நாவாய்பூச்சி கட்டுப்பாடு (இரசாயன முறை) - வீடியோ

மேலாண்மை:
இரசாயன முறை:

  • தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருபின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,
  • மோனோகுரோட்டாஃபாஸ் 36 WSC மருந்தினை 10 மி.லி + 10 மி.லி    நீருடன் சேர்த்து 45 நாட்கள் இடைவெளியில் 3 முறை வேர் மூலம் வெலுத்த வேண்டும்.
  • கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
  • 0.1% கார்போரைல் (1 மி.லி/ லி நீரில் கலந்தது) கரைசலை கொண்டைப் பகுதியிலுள்ள புதிதாக மலர்ந்த பெண் மலர்களின் மீது தெளிக்க வேண்டும்.  இம் மருந்துகள் முற்றிய காய்கள் மற்றும் ஓலைகளின் மீது படக்கூடாது.  நண்பகல் நேரத்தில் மருந்து தெளிப்பதால் தென்னையின் கருவுறுதலுக்கு உகந்த நன்மை செய்யும் பூச்சிகள் கொல்லப்படுவதைத் தவிர்க்கலாம.

பொறிஅமைக்கும் முறை: வளர்ச்சியடைந்த பூச்சிகளை விளக்குப்பொறி அமைத்துக் கவர்ந்து கொல்லலாம்.

மேலே செல்கமேலே செல்க

 

8.பைப் புழு:  மனதா அல்பிபெஸ்:
தாக்குதலின் அறிகுறிகள்:

  • ஒழுங்கற்ற,  சிறிய அளவிலான துளைகள் ஓலைகளில் தென்படும்.
  • ஓலையின் உட்புறத்தில் பட்டு இழைகளால் பின்னப்பட்ட பை போன்ற அமைப்புகள் காணப்படும்.
பை புழு அறிகுறிகள்
பை புழு


பூச்சியை இனம் காணுதல்:
இளம்புழு: பட்டு நுால் போன்ற இழைகளால் பின்னப்பட்ட நீளவாக்கிலான கூட்டினுள் (பையினுள்) காணப்படும்.

மேலாண்மை:
இரசாயன முறை:

  • வளர்ச்சியடையாத பூக்கள் எங்கு  தென்படினும் (தோப்பினுள்) சேகரித்து அழித்து விடவேண்டும்.
  • தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,
  • மோனோகுரோட்டாஃபாஸ் 36 WSC மருந்தினை 10 மி.லி + 10    நீருடன் சேர்த்து 45 நாட்கள் இடைவெளியில் 3 முறை வேர் மூலம் வெலுத்த வேண்டும்.
  • கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

பொறி அமைத்தல்: விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.  ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும்.

மேலே செல்கமேலே செல்க

 

9. சாம்பல் நிற வண்டு:   லுாக்கோஃபோலியோ கோனியோஃபோரா:

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் தென்னங்கன்றுகளின் வேர்களில் துளையிட்டு நடுப்பகுதி முழுவதையும் தின்றுவிடுவதால் கன்றுகள் மஞ்சள்  நிறமடைந்துப் பின் காயத் தொடங்கும்.
  • வளர்ந்த மரங்களில் இவ்வண்டு தாக்குவதால் ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல்,  குரும்பை உதிர்தல். பூக்கும் பருவம் தள்ளிப்போதல், வளர்ச்சி மற்றும் மகசூல் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தால்  இவ்வண்டுகளைக் காண முடியும்.
  • இந்த வண்டினால் ஊடுபயிராக இடப்பட்டுள்ள கிழங்கு வகைகளும் தாக்கப்படுகின்றது.

பூச்சியை இனம் காணுதல்:

முட்டை:  நீள்வட்ட வடிவில், இடப்பட்ட உடன் நல்ல துாய நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும்.  பொரிக்கும் தருணத்தில் சற்று மங்கலான வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும்.
இளம் புழு: பல சுருக்கங்கள் மற்றும் சதைப்பற்றுடன் வளைந்து இருக்கும்.  துாய வெண்மை நிறத்துடன், பழுப்பு நிறத் தலையுடன் காணப்படும்
வளர்ச்சியடைந்த வண்டுபழுப்பு நிற உடலில் நேரான இறக்கைகள் இருக்கும். இறக்கைகள் சிறியதாக வயிற்றை  சிறிதளவு மட்டுமே மறைத்தவாறு இருக்கும்.

மேலாண்மை:
உழவியல் முறை:

  • கோடையின் முதல் மழைக்குப் பின் வாரத்திற்கொருமறை என 4-5 முறை நிலத்தினை உழுது விடவேண்டும்.  இதனால் வண்டு மற்றும் அதன் புழுக்கள் மேலெழுப்பப்படுவதால் பூச்சி உண்ணிகள் மற்றும் பறவைகளுக்கு உணவாகின்றன.
  •  தென்னந்தோப்பில் வேப்ப மரக் கிளைகள் இலைகளுடன் கூடியவற்றை நடுவதால் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • பாதிக்கப்பட்ட தென்னையைச் சுற்றியுள்ள மண்ணை தோண்டிவிடுவதாலோ (அ) உழுவதாலோ (மழைக்குப் பின் அவ்வபோது) இப்பூச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

பிறமுறைகள்: வேம்பு, பெரு மரம், கருவேல், போன்ற மரக்கிளைகளை தோப்பில் நடுவதால் மழை பெய்யும் மாலை நேரங்களில் வண்டுகள் ஈர்க்கப்படும். இவற்றை சேகரித்து அழித்து விடவேண்டும்.

பொறி அமைத்தல்: ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் விளக்குப் பொறி (அ) தீப்பந்தம் வைப்பதால் கவர்ந்து கொல்லலாம்.

இரசாயன முறை: மாலத்தியான் 5 D (அ) 25 கி,கி/ ஹெ என்ற வீதத்தில் பொடியை கன்றுகளை நடுவதற்கு முன்பு மண்ணில் துாவ வேண்டும்.  போரேட் 10 G - 100 கி/ மரம் (அ) 0.04% குளோர்பைரிஃபாஸ் கரைசலில் கன்றின் வேர்ப்பகுதியை நனைத்தபின் நடவேண்டும்.  இப்பொடியை மழை பெய்த உடன் ஏப்ரல்-மே மாதத்தில் 1 முறையும், மீண்டும் செப்டம்பரில் ஒரு முறையும் இட வேண்டும்.  பரிந்துரை:-  கேரள வேளாண் பல்கலைக்கழகம்.

மேலே செல்கமேலே செல்க

 

10. கரையான் - ஓடன்டோடெர்மஸ் ஒபிஸஸ்:

கரையானின் அறிகுறிகள் - மரத்தின் அடிப்பகுதியில் மண் மேலெழுந்து காணப்படும்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • கன்றுகளை நட்ட இளம் பருவத்தில் கரையானின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்.
  • மரத்தின் அடிப்பாகங்களில் மணல் கலந்த மண்ணிலால் ஆன வரிகள் ஓடியிருப்பது இதன் அறிகுறியாகும்.

கரையானை அடையாளம் காணுதல்:

அறிவியல் பெயர்: ஓடன்டோ டெர்மஸ் ஒபிஸஸ்
முதிர்ந்த கரையான்கள்: சிறிய மஞ்சள்-வெள்ளை நிறத்தாலான பூச்சிகள் பெருங்குழுவாக வசிக்கும்.  இக்குழுவானது அரசன்,  அரசி ராணி,  வேலையாட்கள் மற்றும் போர்வீரர்கள் போன்ற பலவகைப் பூச்சிகளைக் கொண்டிருக்கும்.

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • தென்னந்தோப்பிற்குள்ளோ அல்லது அருகிலோ கரையான் கூடுகள் இருந்தால் கண்டுபிடித்து அழிக்கவும்.
  • அங்கக உரங்கள் மட்காமல் இருப்பின் அவற்றை அகற்றி சரியான வடிகால் வசதி அமைத்தல் வேண்டும்.  அத்துடன் நாற்றங்காலில் வளரும் நாற்றுகளின் காய்கள் மணல் கொண்டு மூடப்படவேண்டும். 

இரசாயன முறைகள்:

கரையான் கட்டுப்பாடு - மரத்தின் அடிப்பகுதியில் கால்சியம் இடவும்

  • காப்பர் சல்பேட் 1% (அ)   முந்திரி ஓட்டு எண்ணெய்         80% (அல்லது) குளோர்பைரிபாஸ் 3 மி.லி / லி நீரில் கலந்து வேப்ப எண்ணெய் 5% (அ) வேம்புகாய்பொடி 20% கலந்து தெளிப்பதன் மூலம் தென்னை ஓலைகளைக் கரையான் தாக்காமல் தடுக்கலாம்.
  •  மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலைப் பூசுவதன் மூலமும் தடுக்கலாம்.
  • வேப்ப எண்ணெய் கலந்து வளர்ந்த மரத்தில் தரையிலிருந்து 2 மீ உயரம் வரை தண்டுப்பாகத்தில் பூசுவதன் மூலமும் கரையான் தாக்காமல் தவிர்க்க இயலும்.

மேலே செல்கமேலே செல்க

 

11. கண்ணாடி இறக்கை நாவாய் பூச்சி:

கண்ணாடி இறக்கைப்பூச்சி - அறிகுறிகள்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • ஓலைகளின் மேற்பகுதியில் வெண்ணிறப் புள்ளிகள் .
  • இப்பூச்சிகள் ஓலைகளிலிருந்து சாறினை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன.  அதோடு இவை பைட்டோபிளாஸ்மா வேர் அழுகல் நோயினை பாதித்த மரங்களிலிருந்து நல்ல மரங்களுக்கு தொற்றுவிக்கும் காரணியாகச் செயல்படுகின்றன.
கண்ணாடி இறக்கைப்பூச்சி - பூச்சியின் விபரம்


பூச்சியை இனம் காணுதல்:

  • இளம் பூச்சி: வெள்ளை நிற உடலில் அடர் நிற புள்ளிகள் உடையவை.
  • வளர்ந்த பூச்சி: வளர்ச்சியடைந்த பூச்சிகள் வெண்ணிறத்துடன், கண்ணாடி போன்ற வலையமைப்புடன் இறக்கைகள் கொண்டிருக்கும்.

மேலாண்மை:
உழவியல் முறைகள்:
இப்பூச்சி தாக்கப்பட்டுள்ள ஓலைகளை அகற்றி, அழிக்கவும்.

இரசாயன முறை: கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்:

  • மாலத்தியான் 50 EC - 2 மி.லி/ லி
  • டைமெத்தோயேட் 30 EC -1 மி.லி /லி
  • மெத்தில் டெமட்டான் 25 EC - 1 மி.லி / லி
  • பாஸ்போமிடான் 40 SL - 1.25 மி.லி / லி
  • 3% வேப்ப எண்ணெய்

மேலே செல்கமேலே செல்க

 

12. செதில் பூச்சிகள்: ஆஸ்பிடியோட்டஸ் டெஸ்ட்ரக்டர்:

செதில்பூச்சிகள் அறிகுறிகள்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • செதில் பூச்சிகள் தென்னை ஓலை மற்றும் பாளைகளைத் தாக்குகின்றன.
  • இப்பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும்போது, அது பூம்பாளைகள், குரும்பைகளில் மற்றும் ஓலைகளின் அடிப்பகுதியில் சாறை உறிஞ்சி விடுவதால் ஒரு கடினத்தன்மை உருவாகிறது.
  • இப்பூச்சிகள் கட்டியான செதில் உறைகளை உருவாக்கி அதில் இருந்து கொண்டே மஞ்சள் நிறமாற்றத்தை இலைகளில் ஏற்படுத்துகின்றன.
  • இளம்பூச்சிகள், இக்கூட்டிற்குள் இருந்தே சாறை உறிஞ்சி வளர்ச்சியடைகின்றன.
  • தாக்கப்பட்ட மரத்தின் ஓலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி தொலைவிலிருந்து பார்க்கும்போதும் நன்கு வேறுபாடு தெரியும்.
  • அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களில் ஓலைகள் காய்ந்து விழுந்து விடுவதால் கொண்டைப்பகுதி முழுதும் பட்டுப்போய்விடுகிறது.  அதோடு புதிய ஓலைகளின் வளர்ச்சி குன்றுதல், மகசூல் குறைதல் சில சமயங்களில் மரமே பட்டுப்போதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
  • செதில் பூச்சிகள் ஓலைகளின் அடியில் ஒட்டியிருக்கும் பகுதியில் மேலே மஞ்சள் நிறமாறுதல் தொடங்கி ஓலை முழுவதிற்கும் விரவிக் காணப்படும்.
செதில் பூச்சிக் கூட்டம்
இலையின் மீது செதில்பூச்சி


பூச்சியை இனம் காணுதல்:

  • முட்டை :இலையின் அடிப்பாகத்தில் காணப்படும்.
  • நிம்ப்: வட்ட வடிவ மெழுகுப் பொருளால் இளம் பூச்சிகள் சூழப்பட்டிருக்கும்.
  • முதிர்பூச்சி: வளர்ச்சியடைந்த பெண் பூச்சி வெளிர் மஞ்சள் (அ) சிவப்பு நிறத்தில் உருண்டையாகவும், ஆண் பூச்சி நீள்வட்ட வடிவில் கட்டியான, சாம்பல் நிற உறைக்குள் காணப்படும்.  பெண்பூச்சிகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை, அதோடு அவை தமது வாழ்நாள் முழுவதும் உறைக்குள்ளேயே கழித்து விடுகின்றன.  வளர்ந்த ஆண் பூச்சிகள் ஒரு ஜோடி இறக்கைகள் கொண்டுள்ளன.  இவை உணவு உண்ணுவது இல்லை.  பெண் பூச்சிகளைத் தேடி இனப்பெருக்கத்திற்காக அலைந்து கொண்டிருக்கும்.

மேலாண்மை:
இரசாயன முறை:

  • ரோயின் சோப் மீன் எண்ணெய் 2.5% (அ) ஃபென்த்தியான்/ மாலத்தியான் போன்ற ஏதேனும் ஒரு மருந்து தெளிக்கலாம்.  20 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளித்தல் அவசியம்.
  • முற்றிய தேங்காய்களைப் பறித்துவிட்டு 36 WSC மோனோகுரோட்டோஃபாஸ் மருந்தினை ஹெக்டேருக்கு 2 (அ) 1 மி.லி வீதம் தெளிக்கலாம்.
  • மருந்து தெளித்தபின் குறைந்தது 45 நாட்களுக்குக் காய் பறிக்கக்கூடாது.

உயிரியல் முறைகள்: பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் காக்சிநெல்லிட், சைலோகோரஸ் நைக்ரிடியஸ் போன்ற பூச்சிகளை தோப்பினுள் விடுவதால் செதில் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேலே செல்கமேலே செல்க

 

13. மாவுப்பூச்சி/ கள்ளிப்பூச்சிகள்: சூடோகாக்லாங்கிஸ்டைனஸ்:

தாக்குதலின் அறிகுறிகள்:

  • மாவுப்பூச்சிகள் தென்னையில் இளம் திசுக்கள் வளரும் இளம் மட்டைகள்,  ஓலைகள்,  பூம்பாலைகள், புல்லி/ அல்லி வட்டம் என அனைத்துப் பகுதிகளையும் தாக்குகின்றன.
  • இவை விரியாத பூம்பாளைகளிலிருந்து சாற்றை உறிஞ்சிவிடுவதால் இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறமடைந்து,  காய்ந்து விடுகின்றன.
  • இதன் விளைவாக இலைகளின் வளர்ச்சி குறைந்து, மிகவும் குன்றி, சுருள் சுருளாகக் காணப்டுகின்றன.
  • இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஓலை அழுகல் நோயின் அறிகுறிகளைப் போன்றே காணப்படுகின்றன.
  • தாக்கப்பட்ட பாளைகள் விரிவது இல்லை.  அவை விரிந்தாலும் சரியாகக் காய்ப்பது இல்லை.
  • இளம் குரும்பைகளில் காம்புக்கு அடியில் இம்மாவுப் பூச்சிகள் கூட்டமாக இருந்து கொண்டு சாறை உறிஞ்சுகின்றன.  இவ்வாறு தாக்கப்பட்ட குரும்பைகள் பூச்சி பெருக இடமளிப்பதால், அவை அங்கேயே பெருகிப் பின் பல மரங்களைத் தாக்குகின்றன.

 

மாவுப்பூச்சி - அறிகுறிகள் மற்றும் சேதம்


பூச்சியை இனம்  காணுதல்:

  • நிம்ப்: இளம் பூச்சி நிம்ப் எனப்படுகிறது.  நீள்வட்ட வடிவத்தில்,  தட்டையாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  
  • முதிர்ந்த பூச்சி: ஆண் பூச்சிகள் மஞ்சள் நிறத்திலும், பெண் பூச்சிகள் நீளவாக்கில் சற்று ஒல்லியாக வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
    வாழ்க்கைச் சுழற்சி:- 
  • நான்கு நிலைகளை உடையது  -- முட்டை - இளம்புழு I, புழு -  II, வளர்ச்சியடைந்த பூச்சி.
  • பெண்பூச்சி 6 நிலைகளைக் கொண்டது.:  முட்டை - முதல்நிலைப் புழு, இரண்டாம் நிலைப்  புழு, முன் கூட்டுப் புழு நிலை, கூட்டுப் புழு, வளர்ச்சியடைந்த பூச்சி.
  • முதல்நிலைப் புழு “வளர்ப்புழு” என அழைக்கப்படுகிறது.  இது முட்டையிலிருந்து பொரித்த உடனே சுறுசுறுப்பாக வளர்ந்து சென்று சாறினை உறிஞ்சுவதற்கேற்ற இளம்  பகுதியினைத் தேர்ந்தெடுத்து உறிஞ்ச ஆரம்பித்து விடுகிறது .  பின் அப்பகுதியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது.          
  • வளர்ந்த ஆண் பூச்சியில் தலை, மார்பு, வயிறு, ஒரு சோடி உணர் கொம்புகள், ஒரு சோடி இறக்கைகள் இடை மார்புக் கூட்டுடன் இணைந்தது போன்ற பாகங்கள் காணப்படுகின்றன.  பின் ஒரு சோடி இறக்கைகள் தாங்கிகளாக வளர்ச்சியடைந்துள்ளன.
  • ஆண் பூச்சிகள் இனச்சேர்க்கையில்  ஈடுபட்ட பின் விரைவில் இறந்து விடும்.  குறுகிய காலமே வாழ்கின்றன எனினும் இப்பருவத்தில் அவை உணவு உட்கொள்வதில்லை.     

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • இப்பூச்சி தங்கி வளரும் பிற களைச் செடிகளை அகற்ற வேண்டும்.
  • தாக்கப்பட்ட மரத்தின் ஓலை மற்றும் பிற பாகங்களை அகற்றி அழிக்க வேண்டும்.

உயிரியல் முறை:

  • தோப்பினை நன்கு ஆராய்ந்து, வளர்ப்புழு நடமாட்டம் ஏதேனும் உள்ளதா எனக் கவனிக்வும்.
  • காக்சினெல்லிட் வண்டுகள் மற்றும் ஹைமனாப்டிரா பிரிவைச் சேர்ந்த பூச்சி உண்ணும் பூச்சிகள் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தவை.
  • முசுக்கொட்டைச் செடியில் காணப்படும் லைகானிட் பூச்சியான ஸ்பால்ஜிஸ் எப்பியஸ் எனும் புழுவானது மாவுப் பூச்சியின் பல்வேறு நிலைகளான இளம்புழு இரண்டாம் நிலைப்புழு மற்றும் முதிர் பூச்சிகளை விரும்பி உண்ண’கூடியவை ஆதலால் இவற்றைப் பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு பூச்சி உண்ணும் பூச்சிகளான இயற்கை எதிரிகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்போது இரசாயன கட்டுப்பாட்டு முறைகளைத் தவிர்க்கவும்.

இரசாயன முறை:

  • மோனோகுரோட்டோபாஸ் 36 WSC - 1 மி.லி/லி (இளம் கன்றுகளுக்கு 0.05% மட்டுமே தேவை)
  • மீத்தோமைல் 25 EC - 2 மி. லி/லி
  • புரப்பினோபாஸ் 20 EC - 2 மி.லி/லி
  • குளோர்பைரிபாஸ் 20 EC - 2மி.மி/லி
  • புப்ரோஃபெஸின்  20  SC - 2 மி.மி/லி
  • 3% வேப்ப எண்ணெய்
  • முடிந்தவரை வேம்பிலிருந்து பெறப்பட்ட மருந்துகளான வேப்ப எண்ணெய் 2%, வேப்பங்கொட்டை சாறு, ரோயின் சோப்  மீன் எண்ணெய்  25 கி/லி நீரில் கரைத்தது போன்ற இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
  • புரப்பினோஃபாஸ் (அ) டைமெத்தோயேட் மருந்துகளை வேப்ப எண்ணெய் 20 மி.லி/லி நீ உடன் கலந்து பயன்படுத்தலாம்.
  • மருந்து நன்கு தென்னையில் ஒட்டுவதற்கென 1மி.லி டீபால் (அ) சேன்ட்வாய்ட் / லி என்ற விகிதத்தில்  கலந்து தெளிக்கலாம்.

மேலே செல்கமேலே செல்க

 

14. மரநாய்:
அறிகுறிகள்: இளங்கன்றுகள் மற்றும் குரும்பைகளை இது அதிகளவில் தாக்கும். தாக்கப்பட்ட குரும்பைகளில் துளைகள் காணப்படும்.  மேலும் இதனால் அதிக குரும்பைகள் மரத்திலிருந்து கொட்டி விடுகின்றன.

மரநாய்
மரநாய் - அறிகுறிகள்


மரநாயினை இனம் காணுதல் (அ) மரநாயின் தோற்றம்:

  • இந்திய மரநாய் இனங்களின் உடலமைப்பு சற்று பெரியதாகவும், சாம்பல் அல்லது பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
  • உடல் 34 அங்குல நீளமும், 13 அங்குலத்தில் வால் அமைப்பைப்  பெற்றிருக்கும்.
  • உடலில் கறு நிறப் புள்ளிகளையும், கழுத்தில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் பட்டையான குறிகளுடையதாக இருக்கும்.
  • பெரும்பாலும் கழுத்தில் 2 வெள்ளை மற்றும் 3 கறுப்புக்குறிகளைக் கொண்டிருக்கும்.  வாலைச் சுற்றிலும் அதிக அளவில் கறுப்பு வளையங்கள்  காணப்படும்.
  •  கால்கள் கறுப்பு நிறத்தில், முன்பாதத்தில் நகத்தினைப் பாதுகாக்கும் வகையில் சிறு அமைப்புகள் நீட்டிக்  கொண்டிருக்கும்.    
  • பெண் நாயினைக் காட்டிலும் ஆண் நாய் அளவில் சற்று பெரியது.

மேலாண்மை:
இரசாயன முறை:
பழுத்த வாழைப் பழத்தினுள் 0.5 கி கார்போபியூரான் 3 G குருணைகளை வைத்துத் தோப்பினுள் ஆங்காங்கே வைக்கவும்.  இவ் வாழைப்பழப் பொறியின் மூலம் பூனையினைக் கொல்லலாம்.

மேலே செல்கமேலே செல்க

 

15. எலி: ரேட்டஸ் ரேட்டஸ் ராடோனி
தாக்குதலின் அறிகுறிகள்:
இவை குரும்பைகளை அதிக அளவில் தாக்குகின்றன.  தென்னை மரத்தின் அடியில் துவாரமிடப்பட்ட இளந்தேங்காய்கள் விழுந்து கிடப்பதைக் காண முடியும்.

எலியை அடையாளம் காணுதல்:

  • முராய்டே குடும்பத்தைச் சார்ந்த எலிகள் பல்வேறு அளவுகளில் நீண்ட வாலினை உடையவை.
  • ராட்டஸ் மேரினத்தைச் சேர்ந்த முக்கிய எலிகளான கறுப்பு எலி, ராட்டஸ், ராட்டஸ், பழுப்பு நிற எலி மற்றும் ராட்டஸ் நார்வேஜிகஸ் போன்றவை மனிதர்களுக்குத் தொல்லை தருபவை.
  • ரேட்டஸ் மேரினத்தைச் சேர்ந்த முக்கிய எலிகளான கறுப்பு எலி, ரேட்டஸ் ரேட்டஸ், பழுப்பு நிற எலி மற்றும் ரேட்டஸ் நார்வேஜிகஸ் போன்றவை மனிதர்களுக்குத் தொல்லை தருபவை.

எலியின் சேதத்தால் ஏற்படும் அறிகுறிகள்


மேலாண்மை:
கருவி முறைகள்:

  • எலிப் பொறிகளைப் பயன்படுத்தலாம்.
  • இரும்புத் தகடை மரத்தின் அடிப்பாகத்தை சுற்றி அமைப்பதன் மூலம் எலி மரத்தைக் குடைந்து (பொந்து) குழிகள் உருவாக்குவதைத் தடுக்கலாம்.  தரைப்பகுதிளிலிருந்து 2 மீ உயரம் வரை கால்வனைஸிங் செய்யப்பட்ட இரும்பு (அ) கருவேல் மர முட்களையும் மரத்தில் பொருத்தி வைக்கலாம்.
எலிப் பொறி - கருவி முறை


இரசாயன முறை:

  • புரோமோடையலோன் 0.005% மருந்தினை மரத்திற்கு 10 கி / வீதம் கொண்டைப் பகுதியில் 12 நாள் இடைவெளியில் இரு முறை வைப்பதன் மூலம் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்.
  • அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளைப் பயன்படுத்தி புகையூட்டம் செய்யலாம்.
  • 95 பங்கு பச்சரிசி,  3 பங்கு தேங்காய் எண்ணெய் மற்றும் 2 பங்கு ஜிங்க் பாஸ்பைடு கலந்த விஷ மருந்தை எலி இருக்கும் குழியினுள் போட வேண்டும்.
எலி மேலாண்மை - (இரசாயன முறை) - வீடியோ

மேலே செல்கமேலே செல்க

 

16. காய்த்துளைப்பான்  சைக்குளோட்ஸ் ஒம்மா:
தாக்குதலின் அறிகுறிகள்:
இப்பூச்சியின் புழுவானது வளர்ந்து வரும் குரும்பைகளின் இளம் திசுப் பகுதியில் துளையிடுவதால்  குரும்பைகள் உதிரத் தொடங்குகின்றன.

குரும்பைத் துளைப்பான் - வீடியோ

பூச்சியை இனம் காணுதல்:

  • புழுக்கள் கறு நிற  ரோமங்களுடன் காணப்படும்.
  • வளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சி பழுப்பு நிறம் கொண்டது.

மேலாண்மை:

  • புழுக்களைக் கண்டறிந்துஅவற்றை மரத்திலிருந்து அகற்றி அழிக்கவும்.
  • 0.1% (2கி/லி) கார்போரைஸ் தெளிக்கவும்.

மேலே செல்கமேலே செல்க

 

17. நூற்புழுக்கள்:
தாக்குதலின் அறிகுறிகள்:

  • நூற்புழுக்களால் தாக்கப்பட்ட தென்னைகளின் ஓலைகள் மெதுவாக மஞ்சள் நிறமடைதல், குரும்பை உதிர்தல் மற்றும் ஓலையின் அளவு குன்றுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்
  • வேரில் தென்படும் அறிகுறிகளே மிக முக்கியமானவை.
  • கடினமடையாத இளம் வேர்களில் சற்று பெரிய ஆரஞ்சு நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன.
  •  நுாற்புழுவின் தாக்கம் அதிகரிக்கும்போது இப்புள்ளிகள் பெரிதடைந்து வேர் முழுவதும் விரவிப் பரவுகின்றது.  இதனால் இளம் வேரானது பஞ்சு போன்று இலேசாகிப் பின் அழுகத் தொடங்குகின்றது.

நுாற்ழுவினை இனம் காணுதல்:

  • ரோடோபிலஸ் சிமிலிஸ்  நுாற்புழுவானது 1 மி.மீ விடக் குறைவான அளவில் நீண்ட வால் பகுதியுடன் மிகச்சிறிய அளவில் காணப்படுகின்றது.  இதன் இனப்பெருக்க  உறுப்புகள் தனித்தனியே அமைந்து உள்ளன.
  • பெண் புழுக்கள் 18 மில்லி மைக்ரான் நீளமுடைய, உணர் அமைப்பு பெற்றுள்ளன.,  இது நன்கு வளர்ச்சியடைந்து, உருண்ட அடிப்பரப்பில் காணப்படுகிறது.  (வழக்கமாக ஆணி வடிவ ஸபெர்ம்களையும்,  நீண்ட கோனாய்ட் வாலையும் கொண்டது

மேலாண்மை:
இரசாயன முறை: மே-ஜுன் மற்றும் செப்டம்பா-அக்டோபர் மாதங்களில் 10 G போரேட் குருனையினை மரம் ஒன்றுக்கு 100 கி / ஆண்டு என்ற அளவில் இடுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

உழவியல் முறை:

  • சானம்,  தொழு உரம்,   புண்ணாக்குகள் பசுந்தாள் உரங்களை தென்னைகளுக்கு இடலாம்.  சணப்பைப் பயிரினை மர இடைவெளிகளில் ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் அதனை பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தலாம்.
  • சணப்பை, கிளைரிசிடியா போன்ற பயிரின் தழைகள் மற்றும் தண்டினை செப்டம்பரில் மடித்து உழவு செய்வது நல்ல பலனளிக்கும்.
  • நுாற்புழுத் தாக்கம் இருக்கும் பகுதிகளில் எளிதில் பாதிப்புக்குள்ளாகாத, நுாற்புழுத் தாக்குதலை எதிர்த்து வளரக் கூடிய வீரிய தென்னை இரகங்களைப் பயன்படுத்தலாம்.
  • தென்னை நாற்று வயல்களில் வாழையை நிழல் தரும் மரமாக வளர்ப்பதைத் தவிர்க்கவும்.

மேலே செல்கமேலே செல்க

 

1. குருத்தழுகல்  நோய்  - ஃபைட்டோப்தோரா பால்மிவோரா
2. அடித்தண்டு அழுகல் நோய்  - கேனோடெர்மா லுாசிடம்
3. வேர் வாடல் நோய்  - அறியப்படாத காரணி
4. இலை  அழுகல் நோய்
5. இலை கருகல் (அ) சாம்பல் இலைப்புள்ளி நோய் - பெஸ்டலோசியா பால்மிவோரா
6. சாறு வடிதல் நோய்
7. தீவிர இலை கருகல் நோய் - லேசியோடிப்ளோடியா தியோபுரோமே 
8. கொண்டை அடைப்பான் நோய்

மேலே செல்கமேலே செல்க

 

1. குருத்தழுகல் நோய்  -  ஃபைட்டோப்தோரா பால்மிவோரா
தாக்குதலின் அறிகுறிகள்:

  • எல்லா வயதிலுள்ள மரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆனால் இளங்கன்றுகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன,  குறிப்பாக மழைக் காலங்களில், உஷ்ணநிலை குறைவாகவும், காற்றின் ஈரப்பதம் அதிகமாகவும் உள்ள சூழலில் அதிகம் பாதிக்கும்.
  • ஒன்று அல்லது இரண்டு குருத்து மஞ்சளடைவது இந்நோயின்ஆரம்பநிலைஅறிகுறி ஆகும்.
  • குருத்துகளின் மீது கரும்புள்ளிகள் தோன்றும்.
  • குருத்தின் அடிப்பாகம் விரைவில் அழுகிவிடும்.  அது  சுலபமாக மரத்திலிருந்து அகன்று விடும்,
  • இந்நோய் வளர்ந்த இலைகளுக்கும் பரவி,  குழிந்த இலைப்புள்ளிகள் தோன்றும்.   அது முழு இலைகளுக்கும்  பரவி விடுகிறது.
  • புள்ளிகள் ஒழுங்கற்ற விளிம்புகளுடன்,  நீரில் ஊறியது போன்று காணப்படும்.  இலைகள் விரிக்கும்போது ஒழுங்கற்ற புள்ளிகள் தெளிவாக தெரியும்.
  • பின்னர் குருத்துகள் வாடி உதிர்ந்து விடும்.
குருத்தழுகல் நோய் - சேதத்தின் அறிகுறிகள்

மேலாண்மை: 
வேதிமுறை:

  • நோய் தாக்கப்பட்ட கொண்டை பகுதியை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடை ஊற்றி கொண்டைப் பகுதியை நனைக்க வேண்டும்.  புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழைநீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.  (1 லி போர்டோ பசை தயாரிக்க 100 கி காப்பர் சல்பேட் மற்றும் 100 கி நீர்த்த சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைத்து, இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்).
  • தடுப்பு நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடை நோய் பாதித்த மரத்திற்கு அருகில் உள்ள மரத்தின் கொண்டையில் தெளிக்க வேண்டும்.  1% போர்டோ கலவையை நோய் தாக்கப்பட்ட மற்றும் அருகில் உள்ள மரங்களின் மீது தடுப்பு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.   காப்பர் பூஞ்சைகொல்லியால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மரங்களை  (குட்டை ரகங்கள்)  மான்கோசெப் கொண்டு பாதுகாக்கலாம்.  சிறிய, துளையுள்ள பைகளில் 2 கி மான்கோசெப் வைத்து ஓலை தண்டுடன் இணையுமிடத்தில் கட்டி விடலாம்.  மழை பெய்யும்போது பையிலிருந்து சிறிது சிறிதாக வெளிவரும்.  இதன் மூலம் மரத்தை பாதுகாக்கலாம்.
முதிர்ந்த மரத்தில் குருத்தழுகல் நோய்

உழவியல் முறை:

  • போதுமான வடிகால் வசதியை தோப்புகளுக்கு  அளிக்க வேண்டும்.
  • நோய் தொற்று அதிகம் உள்ள தோட்டத்தில் தகுந்த இடைவெளி விட வேண்டும் மற்றும் அதிக நெருக்கத்தை தவிர்க்க வேண்டும்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

 

2. தஞ்சாவூர் வாடல் நோய்/அடித்தண்டு அழுகல் நோய்/கானோடெர்மா வாடல் நோய்: கானோடெர்மா லுாசிடம்

  • தஞ்சாவூர் வாடல் (கானோடெர்மா வாடல்) நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் வாடல்,  ஓலைகள் மஞ்சள் நிறமடைதல்,  வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.
  • அதைத்தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து, அது மேல்நோக்கி பரவும்.  கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும்.
  • சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி, தண்டின் அடிப்பகுதியும் அழுகிவிடும்.
  • மரப்பட்டை எளிதில் உடையக்கூடியதாக மாறி, அடிக்கடி செதில்களாக உரிந்து திறந்தவெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.  மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து,  சிதைந்து,  துர்நாற்றம் வீசும்.
  • தண்டின் அடிப்பகுதியில் அரைத்தட்டு வித்து காளான் தோன்றும்.  கானோடெர்மா தண்டின் அடிப்பகுதியில் வளரும் கடைசியில் மரம் மடிந்து விடும்.
    தஞ்சாவூர் வாடல் / அடித்தண்டு அழுகல் நோய்: சேதத்தின் அறிகுறிகள்

மேலாண்மை:
உழவியல் முறை:

  1. நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும்
  2. பசுந்தாள் உரங்களை வளர்த்து தென்னை பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.

உயிரியல் முறை:

  • சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (பிஎஃப் 1) ஐ மரத்திற்கு 200 கி வீதம்,  200 கி  டிரைகோடெர்மா விரிடே உடன் வருடத்திற்கு ஒருமுறை இடலாம்.
  • 200 கி பாஸ்போபாக்டா், 200 கி அசோட்டோபாக்டர் இவைகளை 50 கி.கி தொழு உரத்துடன் கலந்து மரமொன்றிற்கு இடலாம்.
  • தொழு உரம் 50 கி.கி வேப்பம்புண்ணாக்கு 5 கி.கி வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை உரத்துடன் கலந்து இடலாம்.

வேதிமுறை:

  • மரத்தை சுற்றி 4 அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்தி, அதனுள் சல்பர் பவுடரை இடலாம்.
  • தண்டின் சாறு கசியும் பகுதிகளை செதுக்கி டிரைடிமார்ஃப் (5% காலிக்ஸின்) கொண்டு பாதுகாக்கலாம்.  அதைத் தொடர்ந்து சூடான தாரை ஊற்றலாம்.
  • ஆரியோபங்கின் 2 கி + காப்பர் சல்பேட் 1 கி ஐ 100 மில்லி தண்ணீரில் கலந்து அல்லது டிரைடிமார்ஃப் 2 மில்லி ஐ  100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்தலாம்  (பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக ஒரு வெட்டு வெட்ட வேண்டும்.  மருந்தை பாலித்தீன் பை அல்லது பாலித்தீன் பாட்டிலில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும்.
  • மரத்திற்கு 3 மில்லி காலிக்ஸின் வீதம் தண்டில் ஊசிமூலம் அல்லது வேர்மூலம் செலுத்தலாம்.
  • மரத்தை சுற்றி 1.5 மீட்டர் துாத்தில் 40 லி 1% போர்டோ கலவையை ஊற்றி மண்ணை நனைக்க வேண்டும்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

 

3. வேர்வாடல் நோய்:
தாக்குதலின் அறிகுறிகள்: - நோய்க்கான காரணி:

  • இந்நோய் ஸ்டெபானிடிஸ் டைபிகா எனும் கண்ணாடி இறக்கை நாவாய் பூச்சி மற்றும் பிரெளடிஸ்டா மோஸ்டா எனும் தத்துப்பூச்சியின் மூலம் பரவுகிறது.
  • பூத்தல் தாமதமாவதுடன்,  மகசூலும் குறிப்பிட்ட அளவு குறைகிறது.
  • தண்டு நுனிப்பகுதியில் குறுகி விடுகிறது.
  • இலையின் அளவு குறைகிறது.  இலைகள் முரண்பாடாக வளைந்து அல்லது ஓலைகள் மாட்டின் விலா எலும்புகளை போன்று உட்புறமாக வளைந்து காணப்படும்.  இதனை பிளசிடிடி என்பர்.
  • நோய் அதிகம் காணப்படும் பகுதிகள்:   கேரளாவின் கோட்டயம், ஆலப்புழை, பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் மாவட்டங்கள்.
  • தென்னை வேர்வாடல் நோய் மரத்தை அழிப்பதில்லை, பலவீனப்படுத்துகிறது.  மற்றும் பாதிக்கப்பட்ட மரங்கள் நீண்ட காலத்திற்கு வாழ்வதுடன் குறிப்பிடத்தக்க அளவு மகசூலும் தருகிறது.
  • வேர்வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரங்கள் இலை அழுகல் நோய், காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு போன்ற பூச்சிகளாலும் எளிதில் பாதிக்கப்படும்.  ஆகையால் வேர் வாடல் நோய்  பூச்சி மற்றும் நோய் அறிகுறியுடன் குழப்பி கொள்ளப் படுகிறது
வேர்வாடல் நோய்: சேதத்தின் அறிகுறிகள்

மேலாண்மை:
உழவியல் முறை:

  • நோய் முற்றிய, சரிவர மகசூல் தராத வருடத்திற்கு 10 காய்கள் தரும் மரங்களை வெட்டி அகற்றி விட வேண்டும்.
  • பசுந்தாள் உரங்களை வளர்க்கலாம்  - தட்டைப்பயிறு, சணப்பை, (குரோடலேரியா ஜன்சியா), மைமோஸா இன்விசா, கலபகோனியம் மியூகனாய்டஸ், பியுரேரியா பேசிலாய்டெஸ் முதலியன.  தென்னை குழிகளில் ஏப்ரல் - மே மாதத்தில் விதைத்து செப்டம்பர்  - அக்டோபரில் மண்ணுடன் கலந்து விட வேண்டும்.
  • வாரத்திற்கு  குறைந்தது 250 லி தண்ணீராவது மரத்திற்கு பாய்ச்ச வேண்டும்.
  • தகுந்த ஊடு மற்றும் கலப்பு பயிர்களை தோப்புகளில் பயிரிடலாம்.
  • போதிய வடிகால் வசதியை அளிக்க வேண்டும்.
  • மரத்தின்  அடியிலிருந்து 2 மீ துாரம் தள்ளி வட்ட குழி அமைத்து, 10 செ.மீ ஆழத்தில் உரத்தை இட வேண்டும்.
  • இதனுடன் 50 கி.கி தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம் 1 கிலோ சுண்ணாம்பினை வருடத்திற்கு ஒருமுறை இடலாம்.
  • சணப்பை, அகத்தி, தட்டைபயிறு மற்றும் கலபகோனியம் ஆகிய பசுந்தாள் உரங்கள் தென்னங்குழிகளில் வளர்த்து அக்குழிகளிலேயே சேர்த்து விடுவது சிறந்த பலனை அளிக்கும் ஏனெனில்  அது வேர் வாடல் பாதிப்பை குறைப்பதுடன், காய்களின் மகசூலையும் அதிகரிக்கும்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

 

4. இலை அழுகல் நோய்:
தாக்குதலின்  அறிகுறிகள்:

  • இந்நோய் கூட்டு பூஞ்சைகளால் ஏற்படுகிறது, குறிப்பாக, கொலிடோடிரைகம் குளோயியோஸ்போரியாய்டஸ், எக்ஸிரோஹைலம் ரோஸ்டிரேடம் மற்றும் பியுசேரியம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
  • இலை அழுகல் நோய் பொதுவாக ஏற்கனவே வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களில் தோன்கிறது.  குறிப்பாக கேரளாவின் எட்டு தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, பத்தனம்திட்டா, கோட்டயம்,  எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர், தவிர தமிழ்நாட்டின் தேனி,  திண்டுக்கல்  (கம்பம் பள்ளத்தாக்கு)  மாவட்டங்களில் காணப்படுகிறது.
  • இந்நோயின் முதல் அறிகுறி,  நீரில் ஊறிய கரும்பழுப்பு நிற புள்ளிகள் வேர் வாடல் நோய் பாதித்த குருத்திலைகளின் மீது தோன்றுவது ஆகும்.
  • மெதுவாக இந்த புள்ளிகள் பெரிதாகி,  ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இளம் இலைகள் அழுகி விடுகின்றன.
  • ஒலைகள் விரியும்போது அழுகிய பகுதி காய்ந்து காற்றில் பறந்துவிடுகிறது.  இதனால் மீதம் உள்ள ஓலைகள் விசிறி போன்று தோன்றும்.  சில நேரங்களில் அறிகுறிகள் தீவிரமாகி குருத்துகள் விரியாமல் போகலாம்.
பழுப்பு நிறப்புள்ளி - பெரிதாலதால் அழுகிவிடுகிறது தென்னை ஓலைகளின் விசிறி போன்ற தோற்றம்


மேலாண்மை:
உழவியல் முறை:

  • அழுகிய குருத்து மற்றும் அருகிலுள்ள இரண்டு ஓலைகளையும் அகற்றி விட வேண்டும்.
    வேதி முறை
  • பூஞ்சைகொல்லி ஹெக்சகோனசோல் (கான்டாஃப் 5 கி)  - 2 மில்லி அல்லது மான்கோசெப் (டைதேன் எம் 45 /  இன்டோபிடல் எம் 45) - 3 கி ஐ 300 மில்லி தண்ணீரில் கலந்து குருத்திலைகளின் அடியில் ஊற்ற வேண்டும்.  மித தொற்றுள்ள நேரங்களில் 2-3 முறை தெளிப்பது போதுமானது.
  • உச்சியின் இரண்டு ஓலை இடுக்குகளில் பூச்சிக்கொல்லி மருந்தினை இடலாம்.  அதனை தயாரிக்க போரேட் 10 G / செவிடால் / கார்பரில் 20 கிராமை 200 கி மணல் அல்லது 250 கி  பொடியான வேப்பம் புண்ணாக்குடன சரிசமஅளவு மணலுடன் கலந்து குருத்திலைகளின் அடியில் இட வேண்டும்.
  • கொண்டை மற்றும் ஓலைகளுக்கு 1% போர்டோ கலவை அல்லது 0.5%  காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.4% மான்கோசெப் ஐ ஜனவரி, ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் தெளிக்க வேண்டும்.  தெளிக்கும்போது குருத்திலைகள் மீது நன்குபடும்படி தெளிக்க வேண்டும்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

 

5. இலை கருகல் அல்லது சாம்பல் இலைப்புள்ளி நோய் - பெஸ்டலோசியா பால்மிவோரா:
தாக்குதலின் அறிகுறிகள்:

  • வெளிச்சுற்று முதிர்ந்து ஓலைகள் மீது சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் சாம்பல் நிற வளையத்துடன் தோன்றும்.
  • பின்னர் அவை சாம்பல் கலந்த வெள்ளை நிறமாகிவிடும்.  இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற அழுகிய பகுதியாக காணப்படும்.
  • நோய் தொற்று கடுமையாக உள்ள சமயங்களில் ஓலை விளிம்புகள் முழுதும் காய்ந்து,  சுருங்கி விடும்.
    சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் சாம்பல் நிற வளையத்துடன் தோன்றும்.

மேலாண்மை:
உயிரியல் முறை:
  • நோய் பாதித்த,  2-3 முதிர்ந்த ஓலைகளை அகற்றி விட வேண்டும்.
    வேதி முறை:
  • 1% போர்டோ கலவை அல்லது டைதேன் எம் 45, 3 மாதத்திற்கு ஒரு முறை தெளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
  • 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடை ஓலைகளுக்கு தெளிப்பது நோய் பரவுவதை தடுக்கும்.
  • கடுமையாக நோய் பாதித்த முதிர்ந்த ஓலைகளை அகற்றி எரித்து விட வேண்டும்.  மரத்திற்கு 1% போர்டோ கலவை அல்லது 0.3% புரோபகோனசோல் தெளிக்கலாம்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

 

6. சாறு வடிதல் நோய்: தீலவியாப்ஸிஸ் பாரடோக்ஸா
தாக்குதலின் அறிகுறிகள்:

  • சாறு வடிதல் நோயை மரத்தின்,  நீள்வெட்டு வெடிப்பு மற்றும் காயங்களிலிருந்து கருஞ்சிவப்பு நிற சாறு சில அடி துாரத்திற்கு தாரை தாரையாக வடிவதை கொண்டு அறியலாம்.
  • நோய் முற்றும்போது புள்ளிகள் மேல்நோக்கி பரவுகிறது.
  • கசியும் சாறு காய்ந்து கருப்பு நிறமாகி விடும்.  புள்ளிகளுக்கு அடியில் உள்ள திசுக்கள் அழுகி முதலில் மஞ்சள் நிறமாகி பின்னர் கருப்பாகி விடும்.
  • நோய் முற்றிய நிலையில் மரத்தில் உட்பகுதி அழுகி நடுவில் குழாய் போன்ற இடைவெளியுடன் காணப்படும்.
  • தண்டின் திசுக்கள் தீவிரமாக பாதிப்படையும்போது,  வெளிச்சுற்று ஓலைகள் மஞ்சள் நிறமாகி,  காய்ந்து,  முதிரும்முன் உதிர்ந்து விடும்.  குலைவிடுவதும் கடுமையாக பாதிப்படைகிறது.
மரத்தின் தண்டுப்பகுதியில் உள்ள பிளவுகளிலிருந்து சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வெளிவருதல்


உழவியல் முறை:

  • செதுக்கப்பட்ட பகுதிகளை எரித்து அழித்து விட வேண்டும்.  தண்டில் காயம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
  • 50 கி.கி தொழு உரத்துடன் 5 கிலோ டிரைகோடெர்மா போன்ற எதிர் உயிர் பூஞ்சை உள்ள வேப்பம் புண்ணாக்கினை தென்னங்குழிகளில் செப்டம்பர் மாதத்தில் இட வேண்டும்.
  • வெயில் காலங்களில் போதிய பாசன வசதியையும்,  மழைக்காலங்க்ளில் போதிய வடிகால் வசதியையும் பரிந்துரைக்கப்பட்ட உரத்துடன் அளிக்க வேண்டும்.
  • ஒரு மரத்திற்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கினை,  இயற்கை உரத்துடன் கலந்து இட வேண்டும்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

 

7. இலை  கருகல் நோய்:  லேசியோடிப்ளோடியா தியோபுரோமே
தாக்குதலின் அறிகுறிகள்:

  • பல்வேறு அளவுகளில் குருத்து வடிவ புள்ளிகள் ஓலைகள் மீது காணப்படும்.   
  • புள்ளிகள் பெரிதாகி,  ஒன்று சேர்ந்து,  கருகி கரும்பு பழுப்புநிற விளிம்புடன் மஞ்சள் வளையத்டன் காண்பபடும். 
  • ஓலைகள் விளிம்பிலிருந்து உளநோக்கி வளைந்து,  கருகியும் காணப்படும்.
  • முழு கொண்டையும் கருகிவிடும்.
  • அறிகுறிகள் பூக்காம்பு வரை பரவும்.  அதைத்தொடர்ந்து கொண்டை தொங்கிவிடும்.
  • கருகிய ஓலையும் மேற்புறத்தில் மிகச்சிறிய கருப்பு நிற கரு இல்லா விதைக் குடுவை தோன்றும்.  நோய் உள்சுற்று இலைகளுக்கும் பரவும்.
  • கொண்டைப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று     காய்கள் மற்றும் குருத்துகள் உதிரும்.
  • இறுதில் உச்சி முறிந்து விழுந்து,  மரமும் மடிகிறது.
இலைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள், சாம்கல் நிற வளையத்துடன் தோன்றும். பின் சாம்பல் கலந்த வெள்ளை நிறமாக மாறிவிடும்

கட்டுப்பாட்டு முறைகள்:
வேதிமுறை:
1% போர்டோ கலவை அல்லது 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.2% இன்டோபில் எம் 45 (4 முறை மாத இடைவெளியில் பிப்ரவரி,  மார்ச்,  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) தெளிக்கவும்.

1% போர்டோ கலவை தயாரித்தல்: 400 கி காப்பர் சல்பேட்டை 20 லி தண்ணீரிலும், 400 கி சுண்ணாம்பினை மற்றொரு 20 லி தண்ணீரிலும் தனித்தனியே கரைக்க வேண்டும்.  காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்பு கரைசலுடன் தொடர்ந்து கலக்கி கொண்டே ஊற்ற வேண்டும்.  மண் அல்லது மரக் கலனை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  உலோகத்தாலான கலனை உபயோகிக்க கூடாது.  கலவை சரியான விகிதத்தில் உள்ளதா என்பதை கத்தியை ஒரு நிமிடம் கரைசலுள் முக்கி எடுப்பதன் மூலம் அறியலாம்.  கருஞ்சிவப்பு நிற படிவு இருப்பின் சிறி அளவு சுண்ணாம்பினை கத்தியில் படியாதவரை சேர்க்க வேண்டும்.

போர்டோ பசை தயாரித்தல்: 200 கி காப்பர் சல்பேட்டை எடுத்து 1 லி தண்ணீரில் கரைக்கவும்.  200 கி சுண்ணாம்பினை 1 லிட்டர் தண்ணீரில் தனியே கரைக்கவும்.   மூன்றாவது கலனில் இரண்டையும் ஒரே சமயத்தில் கலந்து கிடைக்கும் கலவையை பசையாக பயன்படுத்தலாம்.

மேலே செல்க | நோய் மேலாண்மை

8. கொண்டை அடைப்பான் நோய்

  • இந்நோயை சுருங்கிய சிறிய குருத்துகள் வெளிவருவதை கொண்டு அறியலாம்.
  • இலைகளில் கடுமையான நுனி கருகல் தோன்றும், அவை விரிவடையாமல் போய் விடும்.  பல சமயங்களில் அது கொண்டையை அடைத்து வைத்ததை போன்று தோற்றமளிக்கும்.
  • முடிவில் பாதிக்கப்பட்ட மரம் மடிந்து விடும்.

கட்டுப்பாட்டு முறைகள்: நோயின் ஆரம்ப நிலையில், 6 மாத இடைவெளியில் (பிப்ரவரி-மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர்) பரிந்துரைக்கப்பட்ட உரத்துடன், 50 கி போராக்சை தென்னங்குழிகளில் இடுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். வேர்வாடல் நோய் பாதித்த பகுதிகளில் 200-300 கி போராக்ஸ் ஒரு மரத்திற்கு வருடத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலே செல்க | நோய் மேலாண்மை








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்